14ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னதாக நியமிக்கப்படும் என, அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அன்றைய தினம் இடம்பெறுவது அமைச்சரவை மாற்றமல்ல என்றும் புதிய அமைச்சரவையே அன்றைய தினம் நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அரசியலமைப்புக்கு அமைவாக 45ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 06 அமைச்சர்களுக்குப் பதிலாக, அக்கட்சியை சேர்ந்த வேறு 06 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]