139 ஓட்டங்களால் முன்னிலையில் இங்கிலாந்து அணி!

காலி சர்வதேச மதைானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைப்பெறுகிறது.

இப்போட்டியில் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நேற்று காலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் 97 ஓவர்கள் வரையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ருவன் பெரேரா 75 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி போட்டியின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

இலங்கை அணி சார்பாக மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும், சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 139 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]