இலங்கைக்கு எதிரான தொடரில், அவுஸ்ரேலிய T20 அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் .

 

இலங்கைக்கு எதிரான தொடரில், அவுஸ்ரேலிய  T20 அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் .

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கவுள்ள அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய  அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் தற்காலிக உதவி பயிற்சியாளர் ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோருடன் இணைந்து பொண்டிங்  செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைமை பயிற்சியாளர் டரன் லீமன்,இந்தியாவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்த உள்ள காரணத்தினால் தற்காலிக நியமனமாகவே பொண்டிங் நியமனம் அமைந்துள்ளது.

மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொண்டிங் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.