13374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு

எதிர்வரும் 10ஆம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13374 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

340 உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்வதற்காக வாக்களிப்பிற்கான சகல அடிப்படை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் அறிவிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.