13 வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

13 வருடங்களுக்கு பின்னர்  விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

இளையதளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்து  2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘குஷி’,மற்றும்  2003ஆம் ஆண்டு வெளியாகிய ‘திருமலை’ படத்திலும் இருவரும்  நடித்துள்ளனர். இந்நிலையில் 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் ஜோதிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘தெறி’ வெற்றிக் கூட்டணியான விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகவுள்ள ‘விஜய் 61’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கெரக்டரில்  ஜோதிகா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும்  கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஷ்ணு என்ற ஒளிப்பதிவாளர் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ‘பைரவா’ ரிலீசுக்கு பின்னர் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.