13 தேக்குமரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

13 தேக்குமரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

சோளன் பொத்திகளைக் கொண்டுசெல்லும் பாணியில் தேக்குமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றை ஏறாவூர்ப்பொலிஸார் 29.10.2018 கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.

மகாஓயா- தம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்தசில நாட்களாக சோளன் பொத்திகள் கொண்டுவரும்போர்வையில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்பிஜிஜிஎஸ். சத்துரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் செங்கலடி பகுதியில் மறைந்திருந்து இம்மரக்கடத்தலை முறியடித்தனர்.

வாகனத்தில் 13 தேக்குமரக்குற்றிகளை அடுக்கி சோளன் பொத்திகளையும் இலைகுழைகளையும் மேலிட்டு நுட்பமாக மறைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மகாஓயா- தம்பிட்டிய பிரதேசத்தைச்சேர்ந்த சாரதி 48 வயதுடைய அத்தநாயக்க முதியன்சேலாகே மஹிந்த தர்மசிறி அத்தநாயக்க மற்றும் உதவியாளர் 60 வயதுடைய மொஹொட்டி முதியன்சேலாகே கிரிபண்டா ஆகியோராவர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]