13 கோடி வாங்கிய பத்மாதேவி

13 கோடி வாங்கிய பத்மாதேவி

Deepika Padukone

சினிமா உலகில் ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட ஹீரோயின்கள் சம்பளம் பல மடங்கு குறைவாக இருக்கும்.

ஆனால் இந்த காலத்திலோ அது மாறுபட்ட கதையாக இருக்கிறது.

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா படுகோன் 13 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Deepika Padukone

பத்மாவதி திரைப்படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருக்கு தலா 10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

Deepika Padukone

இது குறித்து அண்மையில் நடைபெற்ற பத்மாவதி 3D ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோன் “சம்பளம் பற்றி நான் பேச விரும்பவில்லை, இருப்பினும் இவ்வளவு தொகையை ஒரு படத்தில் என்னை நம்பி முதலீடு செய்யப்பட்டிருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. சினிமாவில் பெண்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது” என கூறியுள்ளார்.

Deepika Padukone

சஞ்சய் லீலா இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் மற்றும் பலர் நடிப்பில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் பத்மாவதி.

Deepika Padukone

இந்த திரைப்படமானது தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி வெளியாகவுள்ளது.

Deepika Padukone

இலங்கையில் இந்த திரைப்படத்தை ஐஸ்வர்யா பிலிம்ஸ் இணைந்து வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Deepika Padukone Deepika Padukone Deepika Padukone

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]