13 என்றாலே அனைவருக்கும் பயம் தான்! அதில் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன?

பலரும் பல விடயங்களுக்கு பயப்படுவார்கள். ஆனால் 13 ஆம் எண் என்றால் அனைவருக்குமே பயம் தான்.

இந்த 13 ஆம் எண் உலகில் உள்ள அனைத்து மக்களையுமே அச்சத்திலட ஆழ்த்திவிடும் என்றே சொல்லலாம்.

நாசாவில் நிலாவுக்கு ஆராய்சிக்காக அனுப்பப்பட்ட அப்பல்லோ 13 மட்டும் தான் தோல்வியை தழுவிய ஒரே விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் தங்கள் வீட்டு எண் 13 என்றாலே, அல்லது படிக்கட்டுகளோ, மாடிகளோ அலுவலக கட்டிடங்களோ 13 என்ற வரகூடாது என்பதில் கவனம் இருப்பார்கள்.

அந்த 13ம் திகதி ஒர் வெள்ளிக்கிழமை வந்தால் அது ஒரு தீயசக்தி படைத்த நாளாக உலக மக்களால் கருதப்படுகிறது. அதாவது இந்த நாளில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்காதிருப்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

13 என்ற எண்ணின் பின்னால் பல கதைகள் கூறப்பட்டு வந்தாலும், அந்த எண் ராசியற்ற அல்லது ஆபத்து நிறைந்ததா? என்பது தொடர்பான எந்த வித வரலாற்று ரீதியான மற்றும் அறிவியில் ரீதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. 13 என்ற எண்ணை அடிப்படையாக வைத்து பல திகில் நாவல்கள், படங்கள் என வெளியாகியுள்ளது.

எனவே, உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் 13ம் எண் மீதான காரணமற்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]