13 இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள்

13 இந்திய மீனவர்கள் கைது

இராமேஸ்வரம் மீனவர்கள் பதின்மூன்று பேர் சிறைபிடிப்பு. நேற்று இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று, கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் பதின்மூன்று பேரையும் கைது செய்து இரண்டு விசைபடகையும் கைப்பற்றினர்.

அவர்களை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பின்னர் மீனவர்கள் யாழ்பாண மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]