12 வயது சிறுமியின் செயலால் காதலன் அதிரடி கைது- புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் வனப் பகுதியில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காதலனை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மானவெரிய பிரதேசத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமியொருவர் 20 வயது இளைஞருடன் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி குறித்த சிறுமி காதலனுடன் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் குறித்து சிறுமி நண்பியொருவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் அதிகாரிகளுக்கு அயலவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமியின் தாயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, புத்தளம் மானாவெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் காதல் குறித்து முன்னமே அறிந்துகொண்ட சிறுமியின் தயாரால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

எனினும் தாயார் வீட்டில் இல்லாத சம்பவங்களில் இருவரும் தனித்து இருந்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு இன்று புத்தளம் நீதவான் நீதின்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, குறித்த சிறுமியையும் வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]