விஜய் சேதுபதியின் புரியாத புதிர்

தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நட்சத்திர நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, வருகின்ற 2017 ஆம் ஆண்டும் வெற்றிகரமான  ஆண்டாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை…..இவர் நடிப்பில், ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் – ஜே சதிஷ் குமார் தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.  விஜய் சேதுபதி – ஜே சதீஷ் குமார் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இந்த ‘புரியாத புதிர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
“விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்த்திருநாளை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் இந்த தருவாயில்,  தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை…..விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது……அதனை பொங்கலன்று வெளியாகும் எங்களின் ‘புரியாத புதிர் திரைப்படம் உறுதிப்படுத்தும்….. 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக ‘புரியாத புதிர்’ இருக்கும்….”
ஒரு படத்தின் வரி விலக்கை குறைப்பதில் U சான்றிதழுக்கு மிக பெரிய பங்கு உண்டு…. அதை தவிர்த்து,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய திரைப்படம் என்கின்ற அங்கீகாரத்தை  ரசிகர்கள் ஒரு திரைப் படத்துக்கு வழங்க வைப்பது  U சான்றிதழ் தான்…. தற்போது அந்த U சான்றிதழை, ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து நாங்கள் பெற்று இருக்கிறோம்.குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில்  அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்  எல்லா சிறப்பம்சங்களையும் எங்கள் படம் உள்ளடக்கி இருக்கின்றது. வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி புரியாத புதிர் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எங்களின் புரியாத திரைப்படம் பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே  சதீஷ் குமார்.