118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு

பனி பிரதேசமான அண்டார்டிகாவில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் அரிய ஓவியத்தை கண்டுபிடித்தார்.

பறவை இறந்த நிலையில் கிடக்கும் அந்த ஓவியம் 118 ஆண்டுகளுக்கு முன்பு வரையப் பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த ஓவியத்தில் 1899 என்றும், அதன் ஓரத்தில் ‘டி’ என்ற எழுத்தும் உள்ளது. எனவே அதை ஓவியர் எட்வர்ட் வில்சன் வரைந்திருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துவிட்டார்.

கடந்த 1912-ம் ஆண்டு ஸ்காட்லாந்து குழுவினருடன் அண்டார்டிகாவின் தென் முனைக்கு இவர் வந்தார். 1910 முதல் 1913-ம் ஆண்டுவரை தங்கியிருந்தார்.

இக்குழு இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்த ராபர்ட் பால்கன் தலைமையில் சென்று இருந்தது. இந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஓவியர் எட்வர்ட் வில்சன் அங்கு தங்கியிருந்து ஓவியத்தை வரைந்து இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

‘வாட்டர் கலர்’ மூலம் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் நார்வே நாட்டினர் கட்டிய குடிலில் பல பேப்பர்களால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது.

அதை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஜோஸ்பின் பெர்க் மார்க் கடந்த ஆண்டு கண்டெடுத்தார். அதை ரகசியமாக வைத்திருந்த அவர் தற்போது அதை வெளியிட்டுள்ளார்.