முகப்பு News Local News 114 தங்கக் கடத்தல் முயற்சிகள்

114 தங்கக் கடத்தல் முயற்சிகள்

கடந்த ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 114 தங்கக் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 114 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 65 தங்க கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 62 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 தங்க கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 32 தங்க கடத்தல் சம்பவங்களுடன் இலங்கையர்களும் 17 சம்பவங்களுடன் வெளிநாட்டு பிரஜைகளும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஐந்து தங்க கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது, 49.5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com