11 வயது மாணவியை சரமாரியாக தாக்கிய 15 வயது மாணவன் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

11 வயதான சிறுமியை கத்தியால் குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய 15 வயதான மாணவன் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவனை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஹிக்கடுவை – எகடகொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி இருவரும் விளையாடுவதற்காக அருகில் இருந்த வனப்பகுதியொன்றுக்கு சென்ற போதே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமிக்கும், சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்து சிறுமி கூச்சலிட்டுள்ள நிலையில், சிறுவன் கத்தியால் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்திலும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி குத்தில் படுகாயமடைந்த சிறுமி, காலி – கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]