11 வயது சிறுமி மீது கத்தி குத்து; 15 வயது சிறுவன் விளக்கமறியலில்…

ஹிக்கடுவை – எகடகொட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே ஊரை சேர்ந்த 11 வயது சிறுமியை கத்தியால் குத்தி படுகாயங்களுக்குள்ளாக்கியதால் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி இருவரும் விளையாடுவதற்காக அருகில் இருந்த வனப்பகுதியொன்றுக்கு சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் வாய்தகராறு அதிகரித்து சிறுமி சத்தமிட்டதால் சிறுவன் கத்தியால் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்திலும் தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த சிறுமி, காலி – கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுவனை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]