11 மணித்தியால நீர் விநியோக தடை!!

கொழும்பு புறநகர் பகுதியில் நாளைய தினம் (30) காலை 8 மணி தொடக்கம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க, மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணித்தியாலம் நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மணித்தியால நீர்
இலங்கை நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு 1939 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]