முகப்பு News Local News 11 பேருடன் பயணித்த மீன்பிடி படகு விபத்து

11 பேருடன் பயணித்த மீன்பிடி படகு விபத்து

அம்பலாந்தோட்டை மீனவ துறைமுகத்தில் இருந்து 11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று ஹிக்கடுவைக்கு அருகிலுள்ள கடல்பரப்பில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கடற்படையினரும் இணைந்து அந்த படகை தேடி வருவதோடு, தேடுதல் பணியில் விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

நேற்று காலை பயணித்தை ஆரம்பித்த இந்த படகு அலையில் சிக்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

படகில் பயணித்த மீனவர்கள் நேற்று மாலை தமது உறவினர்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைத்து, தாம் அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும் இரவு 9.00 மணிக்கு பின்னர் அவர்களுடனான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com