#10YearsChallenge இன் பின்னணி இது தானா? அதிரவைக்கும் உண்மை!

#10YearsChallenge என்று அதிகமானோர் தங்களது புகைப்படங்களை இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

இந்த #10YearsChallenge என்ற ஹாஷ்டாக் மூலம் பரப்பபடும் புகைப்படங்கள் பேசியல் ரெகக்னிஷேசன் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்ய பயன்படுத்துவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக  சமூக வலைதள சேலஞ்சுகளின் காலம் என்றே சொல்லலாம். ஐஸ்பக்கெட் சேலஞ்ச், புளூ சட்டை சேலஞ்ச், ஈட்டிங் சில்லி சேலச் என்று பல சேஞ்சுகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

10YearsChallenge என்ன என்றால் நமது 10வருட பழைய புகைப்படத்தையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டல் வேண்டும்.

இதனாலேயோ என்னவோ தொடர்ந்து நடிகர்கள் முதல் அனைவரும் இந்த சேலஞ்சில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் #10YearsChallenge என்று தேடினால் அதில் கிடைக்கபெறுகிறது.

ஆனால் இது ஒருவகை தகவல் திருட்டு தொழில் நுட்பத்திற்காக தொடங்கப்பட்டது என்று அதிர்ச்சி தரும் தகவலை பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் என்பவர் கூறியுள்ளார்.

மேலும், பேஸ்புக் உங்களின் வயது வித்தியாசத்தில் உங்கள் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் வைத்து பேசியல் ரெகக்னிஷேசன் தொழில்நுட்பத்தை முறைகேடான முறையில் அப்டேட் செய்ய இந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இது மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]