105 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரி

105 பொலிஸ் அதிகாரி களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் 3 பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறவினர்களான குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அதிகாரிகள் கடமை புரியும் பகுதிகளில் அவர்களின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]