1000 ரூபா சம்பளம் கோரி இன்றும் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!

இன்று ஹட்டன் நகரில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, அதில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் பாதீட்டில் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாக கூறி தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாக ஆயிரம் ரூபாய் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]