1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலக தயார்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் அமைச்சு பதவியிலிருந்து விலக தயாராக இருக்கின்றேன். என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஒக்டோபர் 24 போராட்ட குழுவிலிருந்து இரண்டு இளைஞர்களை அழைத்துச் செல்ல தான் நவடிக்கையெடுக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா முற்கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக தொழிற்சங்கத்தினருக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]