1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மஹாபாரதம்

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழில் அதிபர், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மகாபாரத்தை திரைப்படமாக எடுக்க முன் வந்துள்ளார்.

இந்தியக் காவியமான ‘மஹாபாரதத்தை’ திரைப்படமாக்க ரூ.1,000 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. மோகன்லால் நடிப்பில் 2020-ல் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் தொழிலதிபர் தயாரிப்பில் ஸ்ரீகுமார் மேனன் என்ற இயக்குனர் மகாபாரதத்தை படமாக எடுக்க உள்ளார். இதற்கு முன், மகாபாரதம், ‘டிவி’ தொடராக பி.ஆர்.சோப்ரா தயாரித்து வெளி வந்தது. எனினும், திரைப்படமாக எடுக்க பலரும் விருப்பப்பட்டாலும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி கூட, மகாபாரதம் படம் குறித்த விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.