100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் – வளிமண்டல திணைக்களம்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களாக வீசும் காற்று இன்றும் வீச கூடும் என்பதுடன் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]