100 பெண்களுக்கு தாலி கட்டிய நடிகர்

தெனாலி, பஞ்ச தந்திரம்,பாறை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெயராம்.

JAYARAM

அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜெயராம் கலந்துக்கொண்ட போது அவரிடம் கேள்விகள் சில கேட்கப்பட்டது.

“இதுவரை நீங்கள் நடித்த நடிகைகளில் மிகவும் அழகான நடிகை யார்?”

JAYARAM

அதற்கு பதிலளித்த ஜெயராம் “இதுவரை 100 நடிகைளுக்கு மேல் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன். அவர்களில் 100 பேருக்குமே நான் தாலி கட்டும் காட்சியில் நடித்துள்ளேன். என்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளில் யார் அழகானவர் என்று குறிப்பாக சொல்ல முடியாது. ஏனென்றால் அது நடிகைக்கு நடிகை மாறுபடும்.” என தெரிவித்துள்ளார்.

JAYARAM

மேலும் பதிலளித்த ஜெயராம் “என்னைப் பொறுத்தவரை மிகவும் அழகானவரை நான் என் வீட்டுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்று விட்டேன். அவர் வேறு யாருமல்ல என் மனைவி பார்வதி 1992ம் ஆண்டு பார்வதியை நான் மணந்தேன். அப்போது அவர் முன்னணி நடிகையாக இருந்தார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதால் இனி நடிக்க மாட்டேன் என்று அப்போதே அவர் தெரிவித்தார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

JAYARAM

ஜெயராமின் மனைவி மலையாளத்தில் 50ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]