100 கோடி, 125 கோடிக்கு எல்லாம் வாய்ப்பில்லை – பேட்ட ,விஸ்வாசம் வசூல் பற்றி பிரபலம் கூறியது!

பேட்ட மற்றும் விஸ்வாசம் இ்ரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்.

நேற்று பேட்ட படம் ரூ.100 கோடி வசூலித்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

மேலும் இதற்கு போட்டியாக  நேற்றிரவே விஸ்வாசத்தின் KJR ஸ்டியோஸ் படம் ரூ. 125 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறியது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]