100 கணக்கான காதல் ஜோடிகள் கைது

அநுராதபுரம் காவல்துறை தலைமையக காவல்துறை அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 104 காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி இந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் அநுராதபுரம் நகரில் உள்ள பூங்காக்களில் உலவுவதாக தொடர்ந்து காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சில காதல் ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட காதல் ஜோடிகள் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]