100 ஆவது டெஸ்ட்டில் விளையாடும் ஹசிம் அம்லா சதமடித்தார்

amla

100 ஆவது டெஸ்ட்டில் விளையாடும் ஹசிம் அம்லா சதமடித்தார்.

ஜொகானஸ்பேர்க்கில் இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்கா விளையாடும் இன்றைய போட்டியானது ஹசிம் அம்லாவின் நூறாவது  போட்டி ஆகும்.

இன்றைய போட்டியில் அம்லா சதமடித்து சாதிதுள்ளார்.100 வது போட்டியில் 100 அடித்த 8 வது வீரர் அம்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சதம் பெற்றதற்கு பின்னர் அம்லா பெற்றுக்கொண்ட சதம் இதுவாகும்.

தென்னாபிரிக்கா சார்பில் இதுவரை ஏழு வீரர்கள் நூறு டெஸ்ட் போட்டிகளில் வியைாடியுள்ளனர். ஹசிம் அம்லா இந்த வரிசையில் எட்டாவது வீரராக இணைந்துள்ளார்.

இதற்கு முன்பாக கலிஸ்,பௌச்சர்,ஸ்மித்,பொல்லக், வில்லியர்ஸ்,கேர்ஸ்டின்,மக்காயா நிற்னி முறையே 165,146,116,108,106,101,101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிக்கு முன்னர் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 7665  ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 31 அரைச்சதங்களும் 25 சதங்களும் 4 இரட்டை சதங்களும் 1  முச்சதமும் அடங்கும்.