100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்

கொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை தோட்டபகுதியிலே இன்று விடியற்காலை 12.45மணி அளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வேனை செலுத்திய சாரதி மற்றும் மேலும் ஒரு நபர் படுகாயமடைந்த நிலையில் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டரிய படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.