10 வருடங்களில் 8000 கருக்கலைப்பு செய்த பெண்!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெண் ஒருவர் 10 வருடங்களில் 8000 முறை கரு கலைப்பு செய்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பொன்னுச்சாமி நகரில் சேர்ந்தவர் ஆனந்தி. இவர் 12 ஆம் வகுப்பு வரை மடடுமே படித்துள்ளார். தன்னை மருத்துவர் என கூறி தனது வீட்டில், கருவில் பெண் சிசு இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு சிகிச்சை செய்து வந்துள்ளார்.

இவர் ஒரு முறை 9 பெண்களுக்கு வைத்து மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த தொழிலை ஆரம்பித்த நிலையில் இவரும் இவருக்கு உடந்தையாக இவரது கனவரும், ஆட்டோ டிரைவர் சிவக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர் கடந்த 10 வருடங்களில் 8000-க்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவருக்கு டீலிங் இருந்துள்ளது. ஒரு சத்திர சிகிச்சைக்கு 60,000 முதல் 1 லட்சம் வரை பணம் பெற்று வந்துள்ளார். சில சமயங்களில் பெண்களின் வீட்டிற்கே கூட சென்று சத்திர சிகிச்சை செய்து உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன.  இவர்கள் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]