கொலம்பியா, Puerto Leguizamo நகரில் உள்ள வைத்தியசாலையில் 10 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாய் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். இந்நிலையில், வைத்தியசாலை அதிகாரிகள் வயது குறைந்த சிறுமி குழந்தை பெற்றெடுத்த காரணத்தால் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணையில், தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
ஆனால், இந்த விவரம் அறிந்தும் அச்சிறுமியின் குடும்பத்தார் இதுகுறித்து புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால் அண்ணனை கைது செய்து, குடும்பத்தாரிடம் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]