10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் – வர்த்தமானி இன்று வெளியாகும்

நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று (06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன், அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.