10ஆயிரம் ஓட்டங்களை ரி20யில் எட்டவுள்ள கிறிஸ் கெய்ல்

ரி20 கிரிக்கெட்டில் 10ஆயிரம் ஓட்டங்களை முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ரி20 கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனுமாகிய

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

எட்டவுள்ளார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

ஐ.பி.எல். சீசன் 10 கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் புதன்கிழமை தொடங்கவுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்தவொரு வேகப்பந்து விச்சாளர் பந்து வீசினாலும், சாதாரணமாக பந்து சிக்சருக்கு பறக்கும்.

ஐ.பி.எல். என்றாலே நமக்கு ஞாபகம் வருவது கிறிஸ் கெய்ல்தான். தனது அதிரடி ஆட்டத்தில் அனைத்து ரசிகர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ரி20 கிரிக்கெட் லீக்கில் ஏறக்குறைய அனைத்து தொடரிலும் விளையாடி வருகிறார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

டான் பிராட்மேன், கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழந்து வருகையில், கெய்ல் ரி20 கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.
இதுவரை 18 சதங்கள், 60 அரைசதம், 732 சிக்ஸ், 459 பவுண்டரிகள் என விளாசியுள்ள அவர் இதுவரை 9937 ஓட்டங்களை குவித்துள்ளார். இன்றும் 63 ஓட்டங்கள் எடுத்தால் ரி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களைத் தொட்ட முதல் வீரர் என்ற அரிதான சாதனையைப் படைப்பார்.

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடர் குறித்து கிறிஸ் கெய்ல் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளதாவது,

10 ஆயிரம் ரன்களை எட்ட இருப்பது பற்றி?
இந்த சாதனை நம்ப முடியாததாகும். இது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். இது எளிதானதல்ல. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான வீரர்கள் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளனர். நான் முதல் நபராக 10 ஆயிரம் ஓட்டங்களை ரி20 கிரிக்கெட்டில் எடுக்க இருக்கிறேன். மேலும் எவ்வளவு ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அந்த ஓட்டங்களை எடுக்க என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

உங்களை ரி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்வீர்களா?

(சிரித்துக் கொண்டே) நான் கிரிக்கெட்டின் கிறிஸ் கெய், ரி20 கிரிக்கெட்டின் ராஜா, ரி20 கிரிக்கெட்டின் உலகளாவிய முதலாளி, இதில் நீங்கள் என்னை எந்த வகையான பிராண்டாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ரி20 கிரிக்கெட்டில் நான் நானாகவே இருப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]