1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த ‘பியார் பிரேமா காதல்’ டிரைய்லர்

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பியா பிரேமா காதல்’. இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சாதனை படைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’. இந்த படத்தில் சிங்கிள் டிராக் டோப் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, படத்தை தயாரித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]