1வது வாழ்க்கை சரித்திரமாக வரலாற்றில் தடம்பதிக்கும் “ஜனாதிபதி தந்தை” நூல் வெளியீடு

ஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பாக மகளொருவரினால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கை சரித்திரமாக வரலாற்றில் தடம்பதிக்கும் ‘ஜனாதிபதி தந்தை’ நூல் வெளியீடப்படவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைப் படைத்து சாதாரண விவசாய குடும்பமொன்றில் பிறந்த மனிதரொருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அபூர்வமான கதை மகள் ஒருவரின் வார்த்தைகளில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தனது தந்தை பிரதேசத்தின் அரசியல்வாதியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஜனாதிபதி பதவி வரை கடந்து வந்த பயணத்தில் அவரது மூத்த மகளான சதுரிகா சிறிசேன பெற்ற அனுபவங்களை வைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்தே பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்ததுடன், ஒரு குடும்பமாக அவர்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்து சாதாரண மக்களுக்கு தெரியாத பல தகவல்களை உள்ளடக்கிய சியனேகோரலையிலிருந்து ரஜரட்டவுக்கு வாழ்க்கையை தேடிச்சென்ற துணிச்சலான விவசாய பரம்பரையின் உண்மை வாழ்க்கைச்செய்தி இந்த நூலின் ஊடாக இலக்கிய உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் போராட்டத்தில் இதுவரை வெளிக்கொண்டுவரப்படாத பல்வேறு உண்மைக் கதைகளை உள்ளடக்கிய இந்நூலின் சிறப்பம்சம் அரசியல் சாயலில் அல்லாது சுவையான ஒரு நாவலின் பாணியில் எழுதப்பட்டிருப்பதாகும்.

பல முக்கிய அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் பல காலமாக இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் இருந்தும் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்தும் நூலாசிரியர் இந்த நூலில் சுவையாக விளக்கிச்செல்கின்றார்.

இந்த நூலை எழுதிய ஜனாதிபதியின் மூத்த மகளான சதுரிகா சிறிசேன தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பட்டதாரியாவார்.

அவர் சமூக செயற்பாட்டளாராக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]