ஹோம்லி நடிகையின் ஹொட் அன்ட் ஸ்பைசி

ஹோம்லி நடிகையின் ஹொட் அன்ட் ஸ்பைசி

Athulya Ravi

வி.இசட். துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷ்னி, பாலசரவணன் நடித்துள்ள திரைப்படம் ஏமாலி.

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில் பெண்கள் மது குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது.

Athulya Ravi

குறிப்பாக அதுல்யா ரவி கிளாமராக நடித்த காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் அதுல்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இணையதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Athulya Ravi

இது குறித்து அதுல்யா தனது பேஸ்புக்கில்,”டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள். படத்தில் அதுபோன்ற காட்சி இருக்காது. எனது காட்சிகள் யாருக்காவது தவறானதாகத் தோன்றியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று பதிவு செய்திருந்தார்.

Athulya Ravi

இயக்குனர் துரை இந்த திரைப்படம் பற்றி கூறுகையில்,”இன்றைய இளைய தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி அணுகுகிறார்கள் என்பது தான் கதை. தெய்வீகக் காதல், இப்போது பாஸ்ட் புட் காதலாகியிருக்கும் விதத்தை படம் சுட்டிக்காட்டுகிறது. நல்ல காதல் எது என்பதையும் உணர வைக்கிறது கதை. பிக்அப், பிரேக்அப், பார்ட்டி, லிவிங் டூ கெதர் என்று மாறிப்போன வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது. அதற்கு என்னென்ன காட்சிகள் தேவையோ அது படத்தில் இருக்கிறது. அது வேண்டுமா, வேண்டாமா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டாம். தணிக்கைக் குழு தீர்மானிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]