ஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சின்மயி

கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முதல் ஊடகங்கள் வரை டாக் ஆப் தி ட்ரெண்டாக இருப்பது கவிஞர் வைரமுத்து பிரச்சனை தான்.

7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.

தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன் எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது ஒருபுறமிருக்க, சுவிட்சர்லாந்து நாட்டில் ஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக நடக்க முயன்றதாகவும், அதை தான் தடுக்க பெரும்பாடு பட்டேன் எனவும் பாடகி சின்மயி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதுமட்டுமல்லாது, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

அதில், வைரமுத்து மனைவியான பொன்மனி வைரமுத்துவின் தோழி மகளான ஒரு இளம்பெண், வைரமுத்துக்கு சொந்தமான லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்க வந்துள்ளார். அப்போது, 100 இளம்பெண்கள் தங்கிருக்கும் அந்த விடுதியில் இந்த பெண்ணுக்கு மட்டும் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இளம்பெண்ணும், சொந்தக்காரர் என்பதால் இவ்வளவு மரியாத கொடுக்கிறார்கள் போல என எண்ணி சகஜமாக இருந்துள்ளார்.

அதன் பின்பு தான், வைரமுத்துவின் உண்மை முகம் தெரியவந்ததாம். அதாவது, அந்த இளம்பெண் அங்கு தங்க ஆரம்பித்ததிலிருந்து வைரமுத்து குறித்த விடுதிக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்துள்ளார். அங்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் பேசியுள்ளார்.

இதைப் பிடிக்காத அந்த இளம்பெண், குறித்த விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். இதுவரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காத அந்த இளம்பெண் தற்போது பாடகி சின்மயிடம் இதை தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி, குறித்த இளம்பெண் தனக்கு அனுப்பிய இந்த மெசேஜை ஸ்கிரீன்சாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவும் அவரது பெண்கள் விடுதியும் என மேலதிக தகவலை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]