ஹொரோய்ன் போதைபொருளுடன் தம்பதியினர் கைது

வெலிமடை பகுதியில் ஹொரோய்ன் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி ஒன்றை சோதனையிட்டபோது குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, 21 ஹொரோய்ன் போதைபொருள் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர், லொறிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 37 ஹொரோய்ன் போதைபொருள் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, தென்னங்கும்புர பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]