ஹொரன விபத்தில் இளைஞன் பலி

ஹொரன பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரன- மத்துகம வீதியில் உள்ள அகல் ஓயா பகுதியில் பாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ட்ரக்டர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், புளத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதுடன், ட்ரக்டர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.