ஹொரணையில் பாரிய தீ விபத்து – ஐவர் பலி!!

ஹொரணை – பெல்லப்பிட்டிய பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்துக்கு விச வாயுவே காரணம் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]