முகப்பு News ஹொங்கொங்கில் எட்டு நாடுகள் கலந்து கொண்ட ரகர் போட்டிகள் நிறைவு

ஹொங்கொங்கில் எட்டு நாடுகள் கலந்து கொண்ட ரகர் போட்டிகள் நிறைவு

ஹொங்கொங்கில் எட்டு நாடுகள் கலந்து கொண்ட 20 வயதிற்கு உட்பட்ட ரகர் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த போட்டியின் அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை அணி கொரிய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 17 – 22 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

அரை இறுதிவரை இலங்கை முன்னேற சீனா, சீனதாய்பே மற்றும் சிங்கப்பூர் அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டிகளில் இலங்கை உட்பட ஹொங்கொங், கொரியா, சீனா, மலேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சீன தாய்பே ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com