முகப்பு News Local News ஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

வெலிமடை நகரத்தில் ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை கைதுசெய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 3 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் பேததைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணிபுரியும், வெலிமடை மீரகவத்த, கொஸ்ககஹராவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நகரத்தில் ஹெரோய்ன் போதைபொருள் விநியோகத்தில் நபரொருவர் ஈடுபட்டுள்ளதாக வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணைகளை முன்னெடுதுள்ள வெலிமடை பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com