ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மரணதண்டனை

ஹெரோய்ன் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு கொழும்பு நீதிமன்றம் நேற்று (03) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் 18. 24 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

மொஹமட் ஷியாம் நிஷாம் எனும் பெயரையுடய இவருக்கு எதிரான நீதிபதி கிஹான் குலதுங்க இந்த மரண தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.