ஹெரோய்ன், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கல்கிஸை, இரத்மலானை, பங்களா வீதி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடம் இருந்து 06 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், கஞ்சா அடங்கிய 7 பீடிகள் மற்றும் பெயர் தெரியாத 57 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]