ஹெரோய்னுடன் இருவர் கைது

மட்டக்களப்பு, வாகரை பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறிதத சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 10 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]