ஹெரோய்னுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 250 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]