ஹெரொயின் மற்றும் கசிப்பு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் கைது

ஹெரொயின் மற்றும் கசிப்பு ஆகிய போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் ஏறாவூர்ப் பொலிஸாரினால்  20.11.2018 கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரொயின் விற்பனை செய்த  சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் என்றும் கசிப்பு விற்பனையாளர்கள் களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் தெரியவந்துள்ளதாக  ஏறாவூர்ப் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.பி.ஜி.ஜி.எஸ். சத்துரங்க தெரிவித்தார்.

ஹெரொயின் வியாபாரிகளிடமிருந்து 1380 மில்லி கிராம் போதைப்பொருளும் கசிப்பு விற்பனையாளர்களிடமிருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 1500 மில்லி லீற்றர் கசிப்பு ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற  நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 30 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]