ஹுலுகங்கையில் நீராட சென்ற ஐவர் பலி!!

கண்டி – பன்வில – ஹுலுகங்கை பிரதேச ஆறொன்றில் நீராடிய ஐவர் பரிதாப பலி

கண்டி உற்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலையில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில் நீர்த்தேக்கம் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இவ்வசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பகுதியை சேர்ந்த ஒரு குழு சுற்றுலா வந்த நிலையில் ஹுலுகங்கை – கொஸ்கம பகுதியில் தங்கி இருந்த போது, அருகில் இருந்த ஆற்றுக்கு சென்றபோது வீழ்ந்து அடித்து செல்லபட்டுள்ளனர்.

இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களில்இரண்டு ஆண்களும் 3  பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]