ஹீரோக்களுக்கு சவாலாக சம்பளம் பெரும் நடிகைகள்

ஹீரோக்களுக்கு சவாலாக சம்பளம் பெரும் நடிகைகள்

சம்பளம் பெரும்

சில ஹீரோக்கள் மட்டுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிறார்கள். அதிலும் சில நடிகர்கள் ஒரு கோடி ஒன்றரை கோடிகளை தாண்டுவதில்லை.

அந்த நடிகர்களின் படங்களுக்கு சந்தையில் கேள்வியை அதிகரிக்க பிரபல நடிகைகளை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.

 

அப்போது படத்தில் நடிக்கும் கதாநாயகனை விட கூடுதல் சம்பளம் தந்து அந்த கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்கின்றனர்.

ஹீரோவை பொறுத்தமட்டில் அவர்களுக்கு மார்க்கெட் என்று பார்த்தால் கோலிவுட்டில் மட்டும்தான்.

ஆனால் ஹீரோயின்களோ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றிருப்பதுதான் கூடுதல் சம்பளத்தை பெற்றுத் தருகிறது.

இந்த நிலையில் அனுஷ்கா தான் கோடிகளில் சம்பளம் பெரும் நடிகைகளில் முதலில் இடம்.

சம்பளம் பெரும்

இவர் பாகுபலி படத்துக்காக ரூ. 3 கோடி சம்பளம் பெற்ற அவர் தற்போது நடித்து வரும் பாக்மதி தெலுங்கு படத்துக்கு மூன்றரை கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்.

அனுஸ்காவை தொடர்ந்து தற்போது இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார் நயன்தாரா.

சிரஞ்சீவியின் 151வது படமாக தெலுங்கில் உருவாகும் “உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பளம் பெரும்

ஏற்கனவே என்.டி.பாலகிருஷ்ணாவுடன் “ஸ்ரீராமராஜ்யம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் 102வது படத்திற்கு மூன்றரை கோடி கேட்டுள்ளார்.

அந்த சம்பளத்திற்கு இணக்கம் தெரிவிக்காத நிறுவனம் ஸ்ரேயாவை என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி சேர்த்துவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]