ஹிருனிகாவின் மெய்பாதுகாவலர்கள் 6 பேருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹிருனிகாவின் மெய்பாதுகாவலர்கள் 6 பேருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை.

ஹிருனிகாவின் மெய்பாதுகாவலர்கள்

பாராளுமன்ற உறுப்பனரான ஹிருனிகாவின் மெய்பாதுகாவலர்கள் 8 பேரில் 6 பேருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 32 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹிருனிகாவின் மெய்பாதுகாவலர்கள்

2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன்படி அவர்களுக்கு கொழும்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க தீர்ப்பளித்தார்.

 

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]