ஹிந்தி, தெலுங்கு படங்களை பின்னுக்கு தள்ளிய விவேகம்!

அஜித்தின் நடிப்பில் இந்த மாதம் 24-ம் தேதி பிரமாண்டமான வரவேற்புடன் விவேகம் படம் ரிலீஸாகவுள்ளது, ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்புக்கு நிச்சயம் மிக பெரிய ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரையுலகும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டு இணையதளம் ஒன்று இந்திய திரையுலகில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எது என சர்வே ஒன்றை நடத்தியது, அதில் விவேகம் முதலிடத்தை பிடித்துள்ளது.